close
Choose your channels

கே.பாக்யராஜ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் யூடியூப் பிரபலம்!

Saturday, October 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’முந்தானை முடிச்சு’ படத்தில் இடம்பெற்ற முருங்கைகாய் காமெடியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கயிருக்கும் அடுத்த படத்திற்கு ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சாந்தனுவுடன் பாக்யராஜ், யோகி பாபு, மதுமிதா, ரேஷ்மா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தற்போது யூடியூப் பிரபலம் ஸ்ரீராம் கிருஷ் இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. யூடியூப் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து யூடியூபே ஸ்ரீராம் கிருஷ் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தனு ஜோடியாக முதல்முறையாக அதுல்யா ரவி நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைக்கின்றார். ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவில், ஜொமெய்ன் படத்தொகுப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.