பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் ஞாநி காலமானார்.

  • IndiaGlitz, [Monday,January 15 2018]

பிரபல தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞானிசங்கரன் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ஞாநிக்கு இன்று அதிகாலை 12.30 மணி அளவில் மூச்சித்திணறல் ஏற்பட்டதாகவும், அதன்பின்னர் ஒருசில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்ததாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1954ஆம் ஆண்டு செங்கல்பட்டில் ஞானி பிறந்தார். அவரது தந்தை வேம்புசாமியும் பத்திரிகை துறையில் பணிபுரிந்ததால், ஊடகத்தின் மீது பற்று ஏற்பட்டு பத்திரிகை துறைக்கு வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. கடந்த 2014-ல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், பின்பு அக்கட்சியில் இருந்து விலகினார். எழுத்தாளர், விமர்சகர், இலக்கியவாதி என பல திறமைகள் கொண்ட ஞாநி, பரிட்ஷா என்ற பெயரில் நாடகக்குழுவையும் நடத்தி வந்தார். நடுநிலை அரசியல் விமர்சனங்களுக்கு புகழ் பெற்ற இவரது விமர்சனங்கள் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வந்தது.

மறைந்த ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன், கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு', 'யான்' உட்பட ஒருசில திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

More News

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' டிரைலர் விமர்சனம்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நாச்சியார்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அருள்நிதியின் நடிப்பு பேசப்படும்: தயாரிப்பாளர் நம்பிக்கை

அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள். புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

எஸ்.பி.ஜனநாதன் - விக்னேஷ் சிவன் உதவியாளர்கள் இணையும் 'வஞ்சகர் உலகம்'

கோலிவுட் திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குனர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வஞ்சகர் உலகம்.

ஊரூர் ஆல்காட் குப்பம் விழா 2018 குறித்த அறிவிப்பு

ஊரூர் ஆல்காட் குப்பம் விழா என்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி அதாவது நாளை திருவள்ளுவர் நகர் சமுதாய கூடம், 1-வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெசன்ட் நகர் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்ச் சமூகத்தை புண்படுத்துவேனா? வைரமுத்துவின் உருக்கமான விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாக சொல்லப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கு