close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'மெர்ரி கிறிஸ்துமஸ்'.. முதல் விமர்சனம் கொடுத்த பிரபல தமிழ் இயக்குனர்..!

Thursday, January 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த நேரடி ஹிந்தி திரைப்படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல தமிழ் இயக்குனர் தனது பாராட்டுகளை படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதி உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் அவர்களால் அற்புதமாக எழுதப்பட்ட பரபரப்பான திரைக்கதையில் விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைப் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் இவர்களது நடிப்பை பார்த்து நான் வியப்படைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் காட்சிகள் ஆல்பிரட் ஹிட்சாங் காலத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது என்றும் ப்ரீத்தம் இசை இந்த படத்தின் முக்கிய தூண் என்றும் தெரிவித்துள்ளார். கடைசி 30 நிமிடங்கள் இந்த படத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் ஜனவரி 12 முதல் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தை அனைவரும் கண்டு மகிழுங்கள் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி, உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிகச்சிறப்பாக நடித்துள்ளீர்கள், ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் முன்பே வெளியாகியுள்ள விக்னேஷ் சிவனின் இந்த முதல் விமர்சனம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.