close
Choose your channels

'தளபதி 67' படத்தில் விஷாலுக்கு பதில் இவரா? நேற்றைய பூஜையில் கலந்து கொண்டதாக தகவல்

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக இந்த படத்தின் டீசர் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’தளபதி 67’ படத்தின் பூஜையில் விஜய், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் வேறு சிலரும் கலந்து கொண்ட தகவல் தற்போது கசிந்துள்ளது.

முக்கியமாக இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் த்ரிஷா கலந்து கொண்டதாகவும் அதுமட்டுமின்றி பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஷால் தான் மெயின் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் அவரது கேரக்டர் இந்த படத்தில் தெறிக்கவைக்கும் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. த்ரிஷா விஜய்யின் மனைவியாக நடிக்க இருப்பதாகவும் ப்ரியா அனந்து ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ’வாரிசு’ திரைப்படம் வெளியான பின்னர் தான் ’தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் பூஜை குறித்த புகைப்படங்களும் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.