close
Choose your channels

வடிவேலு காமெடிக்கே டஃப்… 5 கணவன்களை உதறிவிட்டு… 6 ஆவது கணவருடன் காவல் நிலையம் வந்த பெண்!!!

Monday, August 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடிவேலு காமெடிக்கே டஃப்… 5 கணவன்களை உதறிவிட்டு… 6 ஆவது கணவருடன் காவல் நிலையம் வந்த பெண்!!!

 

அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் போலீஸ் ஏட்டாக நடித்து இருக்கும் வைகைப் புயல் வடிவேலுவிடம் உதவிக்கேட்டு ஒரு பெண் காவல் நிலையத்திற்கு வருவார். வந்தவர் ஒரு வாலிபரைக் காட்டி நான் இவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை வைப்பார். திடீரென அந்தப் பெண்ணின் கணவர்கள் எனச் சொல்லிக்கொண்டு 5 பேர் அந்தக் காவல் நிலையத்திற்கு வரும் காட்சி இடம் பெற்றிருக்கும். இதைப் பார்த்த வடிவேலுக்குத் தலையே சுற்றிவிடும்.

அச்சு அசலாக அப்படியொரு காட்சிதான் தற்போது கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள கச்சினஹள்ளி எனும் கிராமத்தில் அரங்கேறி இருக்கிறது. நேற்று கச்சினஹள்ளியைச் சார்ந்த 22 வயது இளைஞன் சந்துரு, 38 வயதுடைய ஒரு பெண்ணுடன் காவல் நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. வந்தவர் நானும் இந்தப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சந்துரு அழைத்துக் கொண்டு வந்த 38 வயது பெண்ணைத் தேடி திடீரென 5 ஆண்கள் காவல் நிலையத்திற்கு வந்திருக்கின்றனர். மேலும் அங்குவந்த 5 பேரும் அந்தப் பெண்ணின் கணவர்கள் என்றும் எனது மனைவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் தன்னுடைய பெயர் பிரியா. நான் ஏற்கனவே 5 பேரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர்களுடன் 2 குழந்தைகளும் பிறந்திருக்கிறது. தற்போது சந்துரு (22) வை காதலிக்கிறேன். நான் சந்துருவுடன் வாழ விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் செய்வதறியாது முழித்த காவல் துறையினர் கள்ளக்காதலில் இதுவும் ஒருவக,. உனக்கு இந்த விவகாரம் வேண்டாம், நீ சின்ன பையன் என சந்துருவுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். ஆனால் சந்துரு காவல் துறையினரின் ஆலோசனையை சிறிதும் பொருட்படுத்துவதாக இல்லை. எனக்கு இந்தப் பெண்தான் வேண்டும். அவளுக்கு எத்தனை கல்யாணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் அடுத்தக் கட்டமாக போலீஸ் சந்துருவின் அக்காவை அழைத்து விஷயத்தை தெரிவித்து இருக்கின்றனர். சந்துருவுக்கு அம்மா-அப்பா இல்லை என்பதும் அக்காவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையத்திற்கு வந்த சந்துருவின் அக்கா எவ்வளவோ எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் சந்துரு கொஞ்சமும் அசையாமல் எனக்கு இந்தப் பெண் வேண்டும் எனத் தொடர்ந்து கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் சந்துருவுடன் என்னை அனுப்பி வையுங்கள் எனக் கேட்டிருக்கிறார். இதனால் வேறுவழியில்லாமல் அப்பெண் மீது ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து வாங்காமல் 6 ஆவதாக திருமணம் செய்திருக்கிறார் என வழக்குத் தொடர்ந்து இருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சிக்கமகளூரு பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.