விஷால் அதிரடி அறிவிப்பு எதிரொலி: திரையரங்க உரிமையாளர்கள் அவசர கூட்டம்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

திரையரங்கு கட்டண உயர்வு, ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவை காரணமாக திரைப்படம் பார்க்க வரும் பாமர ரசிகர்கள் ஒரு படம் பார்க்க நபர் ஒன்றுக்கு ரூ.300க்கும் மேல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மணிக்கணக்கில் பார்க்கிங் கட்டணம், தண்ணீர் பாட்டில் உள்பட தின்பண்டங்களின் கொள்ளை விலை ஆகியவற்றையும் படம் பார்ப்பவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் இன்று காலை அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம், அரசு நிர்ணயித்த பார்க்கிங் கட்டணம், அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனை உள்பட ஒருசில விஷயங்களை அவர் தெரிவித்தார். இதனை மீறும் திரையரங்குகள் மீது அரசிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

விஷாலின் இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மல்டிஃபிளக்ஸ் உட்பட அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது,.

More News

'மெர்சல்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு தடையாக தகர்க்கப்பட்டு வருகிறது

'மெர்சல்' ரிலீஸ் குறித்து விஷால் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் சற்றுமுன்னர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி: அடுக்கடுக்கான தடைகளை தகர்க்கும் 'மெர்சல்'

கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனைகளை சந்திக்காமல் விஜய் படம் வெளியானது இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மெர்சல் படத்திற்கு 'டைட்டில் பிரச்சனை உள்பட பலவேறு தடைகள் ஏற்பட்டு

'பொன்னியின் செல்வன்' எனது கனவுகளில் ஒன்று: அட்லி

பழம்பெரும் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியன் செல்வன்' வரலாற்று நாவலை எம்ஜிஆர், சிவாஜி, மணிரத்னம், கமல்ஹாசன் உள்பட பலர் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

சபரிமலை கோவிலில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எ