close
Choose your channels

'மெர்சல்' ரிலீஸ் குறித்து விஷால் முக்கிய அறிவிப்பு

Friday, October 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் சற்றுமுன்னர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் கேளிக்கை வரி குறித்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வெளியே வந்த விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2% குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் காரணமாக மெர்சல் உள்பட உள்பட அனைத்து திரைப்படங்களும் திட்டமிடபடி வரும் தீபாவளி தினத்தன்று வெளியிடப்படும் என்றும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் திரையரங்குகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கொடுக்கத் தேவையில்லை என்றும், திரையரங்கில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு உரிய விலையளித்தால் போதும் என்றும் கூடுதல் விலை கொடுக்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.