close
Choose your channels

'மெர்சல்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்

Friday, October 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு தடையாக தகர்க்கப்பட்டு வருகிறது. வரும் தீபாவளி திருநாளை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் 'மெர்சல்' தீபாவளியாக கொண்டாடவுள்ளனர்.

இந்த நிலையில் அறிமுகப்படமான 'ராஜா ராணியை அடுத்து 'தெறி' மற்றும் 'மெர்சல்' என இரண்டு விஜய் படங்களை இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் அட்லி அடுத்த படத்திற்கான டைட்டிலை பதிவு செய்துள்ளாராம். அவர் பதிவு செய்த டைட்டில் 'ஆளப்போறான் தமிழன்' என்பது குறிப்பிடத்தக்கது.

'மெர்சல்' படத்தில் விஜய்யின் அறிமுகப்பாடலான 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இதையே அடுத்த படத்தின் டைட்டிலாக அவர் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தையையும் அவர் விஜய்யை வைத்தே இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.