close
Choose your channels

'கத்தி' - 'மிருதன்' படங்களுக்கு உள்ள அபூர்வ ஒற்றுமை

Monday, February 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான கருத்தையும் இந்த படத்தில் அழுத்தமாக கூறியிருந்ததால் இந்த படம் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.


மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'கத்தி' படத்திற்கு அடுத்து புகைபிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இல்லாத அடுத்த படம் ஜெயம் ரவியின் 'மிருதன்' என்பது தற்போது தெரியவந்துள்ளது. மிருதன்' படத்திலும் 'கத்தி' போல சமூக கருத்துக்கள் ஏதும் இருக்குமா? என்பது படம் வெளிவந்த பின்னர்தான் தெரியவரும்.

ஜெயம் ரவி, லட்சுமிமேனன், காளி வெங்கட், பேபி அங்கிதா உள்ளிட்டோர் நடித்த 'மிருதன்' படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்த இந்த படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.