close
Choose your channels

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை 6.30க்கு ஒரு சர்ப்ரைஸ்

Friday, April 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், நடித்துள்ள 'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணியும் முற்றிலும் முடிந்துவிட்டது.


இந்நிலையில் 'தெறி' படத்தின் தெலுங்கு டப்பிங் படமான 'போலீஸ் ஓஹ்டு' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30க்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் செய்தியாக உள்ளது.

'தெறி'யின் தமிழ் டிரைலர் தமிழக விஜய் ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது போலவே இந்த தெலுங்கு டிரைலருக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.