close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த படத்தில் தெருக்குரல் அறிவு பாடல்: நாளை ரிலீஸ்

Sunday, August 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலான ’நீயே ஒளி’ என்ற பாடலை பாடியவர் தெருக்குரல் அறிவு என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஜகமே தந்திரம், மாஸ்டர், துக்ளக் தர்பார், சூரரைப்போற்று உள்பட பல திரைப்படங்களில் அவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பாக சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ’என்ஜாய் என்ஜாமி’ என்ற பாடலை அவர் பாடியது மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’சார்பாட்டா பரம்பரை படத்தை அடுத்து ஆர்யா நடித்துள்ள அடுத்த படத்திலும் தெருக்குரல் அறிவு ஒரு பாடலை பாடியுள்ளார் என்றும் அந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாகவும் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அரண்மனை 3’. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு மற்றும் ரனினா ரெட்டி ஆகியோர் பாடி உள்ளதாகவும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி. சத்யா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, மனோபாலா, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.