close
Choose your channels

'லியோ' படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை? அஜித் படத்திலும் நடிக்க மறுத்ததாக தகவல்..!

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் உள்ள நடிகைகளுக்கு விஜய், அஜித் ஆகியவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற வாழ்நாள் கனவு இருந்து வரும் நிலையில் விஜய், அஜித் ஆகிய இருவருடனும் நடிக்க வந்த வாய்ப்பை அவர் மறுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் மஞ்சுவாரியார் கேரக்டருக்கு முதலில் பரிசீலனை செய்யப்பட்டவர் சாய்பல்லவி என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த கேரக்டரில் தன்னால் நடிக்க முடியாது என்று சாய்பல்லவி கூறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் ’லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா நடித்து வரும் கேரக்டரில் நடிக்க முதலில் சாய்பல்லவியிடம் தான் அணுகப்பட்டது என்றும், ஆனால் அவர் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. த்ரிஷா தற்போது நடித்துவரும் கேரக்டரில் முக்கியத்துவம் இல்லை என்றும் அதனால் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்றும் சாய்பல்லவி கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’என்.ஜி.கே’, தனுஷ் நடிப்பில் உருவான ’மாரி 2’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.