close
Choose your channels

'இராவண கோட்டம்', 'கஸ்டடி' உட்பட இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்கள் குஷி..!

Wednesday, May 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் ஐந்து திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இராவண கோட்டம்: ’மதயானை கூட்டம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இராவண கோட்டம்’ படத்தில் சாந்தனு பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கயல் ஆனந்தி நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் வரும் வெள்ளி என்று வெளியாக உள்ளது.

கஸ்டடி: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவான இந்த படம் வரும் 12ஆம் தேதி வெள்ளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் வித்தியாசமான புரமோஷன் காரணமாக நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் மேலும் முக்கிய கேரக்டரில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பீட்சா 3 தி மம்மி: விஜய் சேதுபதியின் ’பீட்சா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் வெளியானது என்பது தெரிந்ததே. தற்போது பீட்சா மூன்றாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஸ்வின், கவிதா பானு, அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் வெள்ளி என்று வெளியாகிறது.

பர்ஹானா: ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் ரிலீஸ்க்கு முன்னர் சர்ச்சைக்குரிய படமாக கருதப்பட்டாலும் நல்ல எதிர்பார்ப்புள்ள படங்களில் இதுவும் ஒன்று. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் செல்வராகவன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

குட் நைட்: தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ளார். ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ளதை அடுத்து இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வரும் வெள்ளிக்கிழமை ’சக்கரவர்த்தி’ என்ற இந்தி படம் ’லைவ்’ என்ற மலையாள படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.