close
Choose your channels

'கண்ணை நம்பாதே முதல் 'வாத்தி' வரை: இந்த வார திரையரங்குகள் மற்றும் ஓடிடி ரிலீஸ்: ஒரு பார்வை

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியாகி சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செட்ய்து வரும் நிலையில் இந்த வாரம் திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கண்ணை நம்பாதே’ காஜல் அகர்வால் நடித்த ’கோஸ்டி’ மற்றும் பான் இந்தியா திரைப்படமான ’கப்ஜா’ உள்ளிட்ட ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. அதேபோல் தனுஷ் நடித்த ’வாத்தி’ உள்பட ஒரு சில படங்கள் இந்த வாரம் ஓடிடீயில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை மு மாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்க்கும் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் காஜல் அகர்வால் உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள த்ரில் மற்றும் காமெடி அம்சம் கொண்ட திரைப்படம் ’கோஸ்டி’. ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் வெள்ளி என்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி ரசிகர்களுக்கு இந்த படம் பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர்கள் உபேந்திரா மற்றும் சுதீப் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ’கப்ஜா. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வரும் 17ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட இருப்பதை எடுத்து இந்த படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய திரைப்படம் தனுஷின் ’வாத்தி’. இந்த படம் வரும் 17ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மிர்ச்சி சிவா நடித்த ’சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் மார்ச் 17ஆம் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.