close
Choose your channels

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் விருந்து சாப்பிட்ட 80s நடிகைகள்.. வீடியோ வைரல்..!

Thursday, May 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் 80s நடிகைகள் மூன்று பேர் விருந்து சாப்பிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மோகன் நடித்த ’தென்றலே என்னை தொடு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜெயஸ்ரீ. இதனை அடுத்து அவர் பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார்

அதே போல் 80s நடிகைகளில் ஒருவரான சீதா, பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

மேலும் ரஜினிகாந்த் நடித்த ’தில்லுமுல்லு’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர் நடிகை விஜி சந்திரசேகர்.

மேற்கண்ட மூவரும் பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டின் விருந்தின் சுவை குறித்தும் அந்த வீட்டிற்கு வரும்போது தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் மூன்று நடிகைகளும் காமெடியாக பேசும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.