close
Choose your channels

'ஏகே 61' படத்தில் இணைந்த 3 நடிகர்கள், அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? முக்கிய தகவல்கள்!

Sunday, June 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த கட்ட படப்பிடிப்பு மற்றும் இந்த படத்தில் இணைந்த 3 நடிகர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார் என்பதும், ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணா சாலை செட் போடப்பட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அண்ணாசாலை செட்டில் நடைபெறவேண்டிய படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும், இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் புனே படப்பிடிப்பில் அஜித்துடன் மஞ்சுவாரியர் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. புனே படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் மகாநதி சங்கர், பகவதி பெருமாள் மற்றும் ஜிஎம் சுந்தர் ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாகவும் படக்குழுவினர் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்றவாறு பணியை விறுவிறுப்பாக செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos