முதல்முறையாக ரூ.100 கோடி சாதனை: 'பேட்ட' வசூல் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம்

  • IndiaGlitz, [Thursday,January 17 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை ஏற்கனவே எட்டிவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் ரிலீஸான அனைத்து தியேட்டர்களிலும் இரண்டாவது வாரமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் 'பேட்ட' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை மிக விரைவில் நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை இன்று செய்தியாளர்களிடம் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் உறுதி செய்துள்ளார். இந்த படம் வெளியாகி எட்டு நாட்கள் ஆகியுள்ளதாகவும் 10 அல்லது 11 நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இந்த படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்து பாசிட்டிவ் விமர்சனம் வந்து கொண்டிருப்பதாகவும் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் இதனால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

More News

சிம்புவின் 'ரெட் கார்டு' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டது.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மகளின் காதல் திருமணம்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், நம்மூர் சூப்பர் ஸ்டாரின் '2.0' படத்தின் வில்லனாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவருமான நடிகர் அர்னால்ட் அவர்கள் மகளின் காதல் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

த்ரிஷாவை அடுத்து ஓவியாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஓவியா நடித்து வரும் '90ml' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'பீர் பிரியாணி' என்ற பாடலை பிரபல நடிகை த்ரிஷா கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியிட்டார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே

விஜய்யுடன் 'மெர்சல்' தயாரிப்பாளர்: 10 வருட சேலஞ்ச்

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் '10 வருட சேலஞ்ச்' வைரலாகி வருகிறது. கோலிவுட் பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தையும்

'விஸ்வாசம்' படத்தை பார்த்து கொண்டிருந்த ரசிகர் திடீரென பலியான சோகம்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி ரஜினியின் 'பேட்ட' படத்துடன் ரிலீஸ் ஆனாலும் முதல் நாளில் இருந்து இன்று வரை வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக