close
Choose your channels

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மகளின் காதல் திருமணம்

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், நம்மூர் சூப்பர் ஸ்டாரின் '2.0' படத்தின் வில்லனாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவருமான நடிகர் அர்னால்ட் அவர்கள் மகளின் காதல் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

29 வயதான அர்ன்லாடு மகள் கேதரின் 39 வயதான நடிகர் கிறிஸ் பிராட்டை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை நடிகர் கிறிஸ் பிராட் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த திருமணத்திற்கு கேதரின் சம்மதம் தெரிவித்ததால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், த்ரில்லான திருமண வாழ்க்கையை எதிர்கொள்ள ஆவலுடன் இருப்பதாகவும் கிறிஸ் பிராட் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்ட் பிராட் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடித்த 'ஜூராஸிக் வேர்ல்ட், 'அவெஞ்சர்ஸ் உள்பட பல திரைப்படங்கள் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.