close
Choose your channels

விஜயகாந்த்-ராமதாஸ் சந்திப்பு: இருதுருவங்கள் சந்திப்பதால் பரபரப்பு

Thursday, March 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு அரசியல் எதிரியாக இருப்பவர் டாக்டர் ராமதாஸ். விஜய்காந்த் முதல் தேர்தலிலேயே பாமகவின் கோட்டையான விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் ஒவ்வொரு தேர்தலின்போது தேமுதிக, பாமக தொண்டர்கள் மோதிக்கொள்வதுண்டு

இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இரண்டு கட்சிகளும் இணணந்துள்ளதால் இரு கட்சியின் தொண்டர்களும் ஒற்றுமையாக தேர்தல் பணியை செய்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டது

இந்த நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்து பேசவுள்ளார். ராமதாஸ் உடன் அன்புமணியும் விஜயகாந்தை சந்திக்கவுள்ளார். இருவேறு துருவங்களாக இருந்த இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்பால் இரு கட்சி தொண்டர்களும் மனவேற்றுமையின்றி ஒற்றுமையாக பணிபுரிந்து அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos