close
Choose your channels

'அஜித் 61' படத்தில் இணையும் இரண்டு முன்னணி ஹீரோக்கள்!!

Monday, April 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை செட் போடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அவர்களில் ஒருவர் கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லால் என்றும் இன்னொருவர் தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனா என்றும் கூறப்படுகிறது.

‘அஜித் 61 படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் வங்கியை கொள்ளை அடிக்கும் கொள்ளையராக அடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மோகன்லால் மற்றும் நாகார்ஜூனா ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மோகன்லால் மற்றும் நாகார்ஜூனா ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைவது குறித்து அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. போனிகபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.