close
Choose your channels

த்ரிஷா பிறந்த நாளில் வெளியான 'தி ரோடு' மேக்கிங் வீடியோ.. மாஸ் காட்சிகள்..!

Thursday, May 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘தி ரோடு’ என்ற படத்தின் மேக்கிங் வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முழுக்க முழுக்க சாலையில் நடைபெறும் காட்சிகளை கொண்ட இந்த படத்தின் மேக்கிங் வீடியோவில் படக்குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டு மலைப்பகுதியில் ஏறி படப்பிடிப்பு நடத்திய காட்சிகள் அதில் உள்ளன. மேலும் அதிரடி ஆக்சன் கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளார் என்பதும் அவர் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள காட்சிகள் இந்த மேக்கிங் வீடியோவில் உள்ளன. த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த வீடியோவில் உள்ள மாஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அருண் வசீகரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா, உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.சிவராஜ் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.