close
Choose your channels

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் குறித்த முக்கிய தகவல்

Thursday, September 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்திருந்தால் இந்நேரம் முடிந்திருக்கும். ஆனால் பெப்சி வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பெப்சி அமைப்பிற்கு, தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே சுமூகமான உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து அனைத்து படங்களின் படப்பிடிப்பும் மீண்டும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது

அந்த வகையில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் டீசர், டிரைலர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.