close
Choose your channels

அஜித்துக்கு அழைப்பு விடுத்த டுவிட்டர்: ரசிகர்கள் கொண்டாட்டம்

Sunday, December 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித், தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட வரமாட்டார் என்பதும், அவருக்கு எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்பதும் தெரிந்ததே. இருப்பினும் அஜித் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வராத நாளே இல்லை என்று கூறலாம். அது மட்டுமின்றி அவரது படங்கள் குறித்த செய்திகள் அல்லது அவரைப் பற்றி யாராவது பேட்டி கொடுத்தால் உடனே அந்த செய்தி அல்லது பேட்டி டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டுவிட்டரில் இல்லாத ஒருவர் குறித்து டுவிட்டரில் அவ்வப்போது டிரெண்ட் ஆகி வருவது அனேகமாக அஜித் ஒருவருக்காகத்தான் இருக்கும்

இந்த நிலையில் ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோ என்பவர் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’அடிக்கடி டுவிட்டரில் டிரெண்டாகி வரும் அஜித்தை எப்போதாவது நீங்கள் தொடர்பு கொண்டது உண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ’அஜித் டுவிட்டருக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரது படங்கள் குறித்தும், ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் தகவல்களையும், அவர் தெரிந்துகொள்வதற்காக டுவிட்டருக்கு வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்

டுவிட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜரின் அழைப்பை ஏற்று அஜீத் டுவிட்டரில் கணக்கு தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் டுவிட்டர் இந்தியா அஜித்துக்கு அழைப்பு விடுத்ததையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி, அதையும் டிரெண்டாக்கி உள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.