அசோக்செல்வனின் அடுத்த படத்திலும் இரண்டு ஹீரோயின்கள்

  • IndiaGlitz, [Friday,March 20 2020]

அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கை போடு போட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணிபோஜன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஓ மை கடவுளே’ படத்தை அடுத்து தற்போது அவர் 'ஃபேட் செஃப்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவகவிருக்கும் இந்த படத்திலும் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர். நித்யா மேனன் மற்றும் ரீத்துவர்மா ஆகிய இருவரும்தான் இந்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த ’காளி’, கமல்ஹாசன் நடித்த ‘குரு’, ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ போன்ற படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இயக்கும் இந்த படத்திற்கு திவாகர் மணி ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை அசோக் செல்வன் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு தொடங்கும் என தெரிகிறது.
 

More News

கொரோனா எச்சரிக்கை நடவடிக்கை: இன்று முதல் தமிழக கேரள எல்லை மூடல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று மாலை முதல்

கொரோனாவை தவிர்க்க தனிமனித பாதுகாப்பு உறுதிமொழி

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தனிமனித உறுதிமொழி குறித்து ஒரு அறிக்கையை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர், துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் பணிகளில் இந்திய சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த நடிகை த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்திற்கு கொரோனா அறிகுறி!!! மலேசிய நிலவரம்!!!

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தப் பின் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி