close
Choose your channels

குஷ்புவுடன் பாஜகவில் இணைந்த மேலும் இருவர்: பரபரப்பு தகவல்

Monday, October 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்று காலை விலகிய நடிகை குஷ்பு சற்று முன்னர் பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதை அடுத்து குஷ்புவுக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பாஜகவில் இணைந்தவுடன் பேட்டியளித்த நடிகை குஷ்பு ’தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன் என்றும் நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்து செல்கிறார் என்றும் கூறினார் 

இந்தநிலையில் பாஜகவில் குஷ்பு இணைந்ததை அடுத்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த சகோதரி குஷ்புவை முழு மனதுடன் வருக வருக என வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் பாஜகவில் குஷ்பு மட்டுமின்றி மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் ஐ.ஆர்.எஸ்அதிகாரி சரவணகுமார் ஆகியோர்களும் இன்று பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.