close
Choose your channels

உதயநிதியின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு

Wednesday, December 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரியதர்ஷன் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதியுடன் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் உதயநிதி நடிக்கவுள்ள அடுத்த படம், இயக்குனர் குறித்த விபரங்கள் இன்று வெளியாகவுள்ளது. இதனை உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். எனவே உதயநிதியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் இன்னும் ஒருசில மணி நேரத்தில் வெளியாகிவிடும்

உதயநிதியின் புதிய பட அறிவிப்பை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.