close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி!

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள அடுத்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவல் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக புரமோஷன் செய்து வெற்றிப் படமாக்கு என்று எதிர்பார்க்கப்படுவதால் விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு மேலும் ஒரு வெற்றிப்படம் உறுதியாகி உள்ளதாக திரையுலகினர் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.