15 வயது சிறுமியுடன் பாலுறவு கொண்ட 53 வயது கோடீஸ்வரர்! ஆட்டோபைலட் விமானத்தில் நடந்த கொடுமை
ஆட்டோபைலட் விமானத்தில் 53 வயது அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலுறவு கொண்டதாக வெளிவந்துள்ள திடுக்கிடும் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்ஸியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லீ என்ற 53 வயது கோடீஸ்வரர், 15 வயது சிறுமி ஒருவரை தனக்கு சொந்தமான ஆட்டோபைலட் விமானத்தில் அழைத்து சென்று அவருடன் பாலுறவு கொண்டதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான இந்த தொழிலதிபர் பல அறக்கட்டளைகள் நடத்தி பெண்கள், குழந்தைகள் உள்பட பலருக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணையின்போது ஸ்டீபன் குற்றமற்றவர் என்று வாதாடியபோதிலும், சாட்சியங்கள் குற்றம் நடந்ததை உறுதி செய்யும் வகையில் இருப்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.