அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்புகள்!!! இந்தியா குறித்த செய்திகள்!!!

  • IndiaGlitz, [Saturday,May 16 2020]

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் கண்டுபிடிக்கப்படும் என மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இதற்காக “ஆப்ரேஷன் வார்ப் ஸ்பீட்’ என்ற திட்டத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் போது உலகின் முதல் அணு ஆயுதங்களை உருவாக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட திட்டம்தான் இந்த “ஆப்ரேஷன் வார்ப் ஸ்பீட்”. அணு ஆயுதங்களை விரைவாக உருவாக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் பெயரில் தற்போது கொரோனா தடுப்பூசி ஆய்வை விரைவு படுத்தியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

இந்த கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சித் திட்டத்திற்கு 14 முக்கிய விஞ்ஞானிகள் நியமிக்கப் படுவார்கள் எனவும் கூறபடுகிறது. இதுவரை அமெரிக்காவில் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய அறிவியல் தொழில்துறை முயற்சி இது எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பதும் நடக்காத காரியம் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசியைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை கைவிடுமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா குறித்த ஆய்வுகள் மிக விரைவாக நடத்தப்பட்டு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் விரைவு படுத்தப்படும். எனவே அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தடுப்பூசி இருந்தாலும் இல்லையென்றாலும் அமெரிக்க இயல்பு நிலைக்கு திரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க வென்டிலேட்டர் கருவிகளை இந்தியாவிற்கு தனாமாக கொடுக்க முன்வந்துள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி ஆய்வுகளில் இந்திய விஞ்ஞானிகளும் அமெரிக்க விஞ்ஞானிகளும் ஒன்றாக இணைந்தே பணியாற்றி வருகின்றனர். தற்போது ட்ரம்ப் “இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்றும், கண்ணுக்கு தெரியாத இந்த எதிரியை இரு நாடுகளும் இணைந்து ஒழிக்கும்” என இந்தியாவுடன் நட்பு பாராட்டும் விதமாக பேசியிருக்கிறார். கொரோனா குறித்த சீனாவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவுடன் இந்தியா கைக்கோர்க்குமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

செல்போன், ஸ்கைப்பிலேயே அடுத்த பட ஹீரோவை முடிவு செய்த மிஷ்கின்!

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

1000ஐ தாண்டியது ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

தயவுசெய்து இதுமாதிரி யாரும் செய்யாதீங்க: காயமடைந்த பிரபல நடிகரின் வீடியோ!

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு, 2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு: தட்டிக்கேட்ட அத்தையை கொலை செய்த சென்னை வாலிபர்

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த சென்னை வாலிபர் ஒருவரை அவருடைய அத்தை தட்டிக் கேட்டதை அடுத்து, அத்தையை அந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஓடும் ரயிலில் 167 பயணிகள் திடீர் மாயம்: அதிகாரிகள் அதிர்ச்சி

மூன்றாம் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.