close
Choose your channels

செல்போன், ஸ்கைப்பிலேயே அடுத்த பட ஹீரோவை முடிவு செய்த மிஷ்கின்!

Saturday, May 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’சைக்கோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து விஷால் நடித்த ’துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி வந்த மிஷ்கின், திடீரென விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் மிஷ்கின் தனது அடுத்த படம் குறித்த பணிகளை தொடங்கி விட்டார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது மிஷ்கினின் அடுத்த படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. மிஷ்கின் கூறிய கதை அருண்விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், இதனையடுத்து இது குறித்த பேச்சுவார்த்தையை அருண் விஜய்யிடம் செல்போன் மற்றும் ஸ்கைப்பில் பேசி மிஷ்கின் முடித்து விட்டதாகவும், கொரோனா பரபரப்பு முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

அருண் விஜய் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் மிஷ்கினுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிம்பு நடிக்கும் படம் ஒன்றை மிஷ்கின் இயக்க திட்டமிட்டு உள்ளார் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.