close
Choose your channels

ஏஆர் ரஹ்மான் இசையில் பாட்டு பாடிய வைகைப்புயல் வடிவேலு.. எந்த படத்தில் தெரியுமா?

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான திரைப்படம் ’மாமன்னன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது. இந்த பாடலின் ஒலிப்பதிவின் போது ஏஆர் ரஹ்மான் உடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே ’மாமன்னன்’ என்ற டைட்டில் வைகைப்புயல் வடிவேலு கேரக்டரை வைத்து தான் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் அட்டகாசமாக இருந்தனர் என்பதும், அந்த போஸ்டர்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் மாமன்னன் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.