close
Choose your channels

வடிவேலுவின் அதிரடி வில்லன் அவதாரம்

Tuesday, October 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'கடவுள் இருக்குறான் குமார்' மற்றும் 'புரூஸ்லீ' ஆகிய படங்கள் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த வாரம் ராம்பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமானார்.
மேலும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூடன் வைகைப்புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தில் வடிவேலு காமெடி நடிகராக நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த படத்தில் வில்லனாக அவர் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் வடிவேலு காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், தன்னுடைய கேரக்டர் குறித்து கேட்டதும் உடனே வடிவேலு நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்டீபன் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.