நம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து!
டெல்லியில் கடந்த சில நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 34 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமன்றி திரையுலகில் உள்ள ஒரு சிலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் அமைதி காக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.
எதிராக வாக்களித்தவர்க்கும்
— வைரமுத்து (@vairamuthu) February 27, 2020
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.#CAA