close
Choose your channels

ரிலீசுக்கு முன் 'வலிமை' ஸ்பெஷல் புரமோ: அஜித் ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்து!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இறுதி ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ கிட்டத்தட்ட ஒரு நிமிடம் இருக்கும் நிலையில் இந்த வீடியோவில் உள்ள அனைத்து காட்சிகளும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது .

அஜித்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பைக் சேசிங் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் இந்த புரமோவில் உள்ள நிலையில் இந்த படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் உள்ளதாக அஜீத் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை ’வலிமை’ படம் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.