close
Choose your channels

பிக்பாஸ் நாமினேஷனில் இருந்து தப்பித்த வனிதா: எப்படி தெரியுமா?

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 14 போட்டியாளர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி நேற்று எலிமினேட் செய்யப்பட்டார் என்பதால் தற்போது மீதி உள்ள 13 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஓப்பன் நாமினேஷன் படலம் நடந்தது என்பதும் இதில் ஜூலி, சுஜா, அபினய் உள்பட ஒருசிலர் நாமினேஷன் செய்யப் பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள வீடியோவில் பிக்பாஸ், ‘இப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் ட்ரெண்டிங் பிளேயர் யார் என்பது அறிவிக்கப்படும் என்றும், இந்த வாரத்தின் ட்ரெண்டிங் பெயர் வனிதா என்றும் அறிவித்துள்ளார். இதனை அடுத்து வனிதாவுக்கு ட்ரெண்டிங் பிளேயர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் ட்ரெண்டிங் பிளேயர் அந்த வார நாமினேசன் பிராஸசில் இருந்து தப்பித்து விடுவார் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனால் இந்த வார நாமினேஷனில் வனிதா தப்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.