close
Choose your channels

'குக் வித் கோமாளி' போட்டியாளருக்கு ஜோடியாகும் வரலட்சுமி: ரிலீஸ் தகவல்

Tuesday, January 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப் பெரிய ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ 3 சீசன்கள் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவர் சந்தோஷ் பிரதாப் என்பதும் இவர் இந்த நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'கொன்றால் பாவம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் ஜோடியாக வரலட்சுமி நடித்துவருகிறார். இந்த படத்தை தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கி உள்ள நிலையில் இந்தப் படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, சுப்பிரமணியம் சிவா, செண்ட்ராயன், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்து உள்ளதாக தெரிகிறது.

கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையம்சம் கொண்டது. தர்மபுரி பகுதியில் நடந்த ஒரு இணையதள மோசடியில் சிக்கி கொண்ட 26 பெண்ணுக்கு நடந்த துயரமான சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.