close
Choose your channels

முதல் ஷோ டிக்கெட்டே 1000 ரூபாய் தான்.. 'வாரிசு' ஆடியோ லாஞ்ச் டிக்கெட் இத்தனை ஆயிரமா?

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் பங்கேற்க வழங்கப்படும் பாஸ் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை விற்பனையாகி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை நடைபெற உள்ள ‘வாரிசு’ படத்தின் ஆடியோ விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பாஸ்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது என்பதும் இந்த பாஸ் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது லாப நோக்கில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

‘வாரிசு’ ஆடியோ விழாவின் பாஸ் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பல பாஸ்களை 7000 ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு ஆயிரம் ரூபாய் தான் டிக்கெட் எடுத்தோம் என்றும் ஆனால் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் ஏழாயிரம் ரூபாயா என கேள்வி எழுப்பிய ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விஜய் இயக்கத்தின் நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் விஜய் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும் அதனால்தான் அந்த இந்த அளவுக்கு அதிக விலையில் பாஸ் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.