close
Choose your channels

'வாரிசு' டைட்டில் செய்த மேஜிக்: தயாரிப்பாளர் தில்ராஜூக்கு கிடைத்த ஆண் வாரிசு!

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஆண்வாரிசு கிடைத்துள்ள தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூவின் இரண்டாவது மனைவி வைகா ரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான நிலையில் அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தில் ராஜூவின் முதல் மனைவி அனிதா உடல்நல குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது மனைவிக்கு ஆண் வாரிசு பிறந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'வாரிசு’ திரைப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.