close
Choose your channels

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2- அப்டேட் கிடைத்தும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!

Friday, October 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்“. இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ், நகைச்சுவை நடிகர் சூரி, நடிகை ஸ்ரீதிவ்யா போன்றோரின் கூட்டணி அசத்தலாகவே அமைந்திருந்தது. அதுவும் சூரியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை எனும் அளவிற்கு படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்“ படத்தின் 2 ஆம் பாகம் வருவது உறுதி எனும் உற்சாகமான அறிவிப்பை இயக்குநர் பொன்ராம் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் கூடவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்துவரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புத்தான் தற்போது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. காரணம் இந்தப் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் பெயரில் சங்கத்தை வைத்துக் கொண்டு நடிகர் சூரியுடன் சிவகார்த்திகேயன் செய்யும் நகைச்சுவை காமெடிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வரவேற்பு அளித்து இருந்தனர்.

இந்நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்று இயக்குநர் பொன்ராம் தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனால் 2 ஆம் பாகம் படத்தில் யார் ஹீரோ? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கிவிட்டது.

இந்நிலையில் இயக்குநர் பொன்ராம், நடிகர் சசிகுமார் மற்றும் சத்யராஜை வைத்து சமீபத்தில் “எம்ஜிஆர் மகன்“ எனும் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். இந்தப் படம் விரைவில் ரிலீசுக்கு வரவிருக்கிறது. இதையடுத்து நடிகர் விஜய்சேதுபதி நடித்துவரும் ஒரு புது படத்தையும் இவர் இயக்கிவருகிறார். இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு “வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2“ திரைப்படத்தை அவர் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.