close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி: பாடலை எழுதியது இந்த பிரபலமா?

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த பாடலை எழுதியவர் யார் என்பதை கண்டுபிடியுங்கள் என படக்குழுவினர் கூறி இந்த நிலையில் தற்போது இந்த பாடலை எழுதியவர் கவிஞர் தாமரை என அறிவிக்கப்பட்டுள்ளது .

பொதுவாக கவுதம் மேனன் படத்திற்கு தாமரை எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகிய நிலையில் இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.