close
Choose your channels

வெங்கட்பிரபுவின் 'சென்னை-28 2ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி

Tuesday, September 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக இன்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின்சத்யா, விஜய்வசந்த், வைபவ் ரெட்டி, மஹத், விஜயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.