குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது? ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன வெங்கடேஷ் பட்

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது என்பதும் இந்த சீசனில் டைட்டில் வின்னர் கனி, ஷகிலா, அஸ்வின், புகழ், ஷிவாங்கி, பவித்ரா உள்பட பலர் வேற லெவல் பிரபலம் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட பலருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பாக அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படமான ’என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது என்று ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் இதுகுறித்த இனிப்பான தகவலை தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தனக்கு சினிமாவில் நடிப்பது தனக்கு ஆர்வம் இல்லை என்றும் இருப்பினும் எனக்கேற்ற நல்ல கேரக்டர் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன் என்றும் சிம்பு அவர்கள் ஒரு கதை கூறியிருக்கிறார் என்றும் அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.

More News

ராயல் என்ஃபீல்ட் பைக்கை அசால்ட்டாக ஓட்டும் மாளவிகா மோகனன்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் பைக்கில் சாலையில் செல்வது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது

செம குஷியில் ஊழியர்கள்… பேரிடர் காலத்தில் பெரும்தொகையை போனஸ் வழங்கும் நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு தலா 1,500 அமெரிக்க டாலர்களை போனஸ் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ்...! யுவன் ஹிட் பாடலின் புதிய சாதனை....!

தனுஷ்-ன்  ‘ரெளடி பேபி’ பாடலானது 5 மில்லியன் லைக்குகளைப் பெற்று இணையத்தையே அதிர வைத்துள்ளது

ஒரு நபரை “பேய்“ எதனால், எப்படி பிடிக்கிறது? இதற்குத் தீர்வுதான் என்ன?

முன்பெல்லாம் பேய் ஓட்டுவதற்கு என்றே ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு சாமியார் இருப்பார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நம்பிக்கை நட்சத்திரங்கள்?

கொரோனா நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது