close
Choose your channels

ராயல் என்ஃபீல்ட் பைக்கை அசால்ட்டாக ஓட்டும் மாளவிகா மோகனன்: வைரல் வீடியோ

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் பைக்கில் சாலையில் செல்வது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்தார். தற்போது தனுஷின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாலிவுட்டில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் இரண்டரை மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராயல் என்பீல்டு மோட்டார் பைக்கை ஓட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கேப்ஷனாக, ‘ஏன் ஆண்கள் மட்டும் உற்சாகமா இருக்க வேண்டும்? என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.