close
Choose your channels

இதுவரைக்கும் நடக்காத டெர்ரர் அட்டாக்.. வெற்றிமாறனின் 'விடுதலை' டிரைலர்..!

Wednesday, March 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி உள்ள ’விடுதலை’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது ரசிகர்கள் பிரமிப்பு அடைந்துள்ளனர்.

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விஜய் சேதுபதி கூட்டத்தை பிடிப்பதற்காக போலீஸ் படையினர் காட்டுக்குள் செல்கின்றனர்.. காட்டுக்குள் செல்லும் போலீஸ் படையினர்களில் பலர் தீவிரவாதிகளுக்கு பலியாகி வரும் நிலையில் அதிரடி நடவடிக்கை எடுக்கும் போலீசாரின் நடவடிக்கைக்கு பின் விஜய் சேதுபதி பிடிபடுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது

மேலும் விஜய் சேதுபதி பிடிபட்ட பின்னர் அவருடைய பிளாஷ்பேக் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமாகவும் பிரமிப்பாகவும் வெற்றிமாறன் இந்த படத்தை உருவாக்கி உள்ளார் என்பதும் வழக்கம் போல் அவர் இந்த படத்திலும் ஒரு சமூக அரசியலை ஆழமாக அலசி உள்ளார் என்பதும் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்திலிருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் பேசும் 'மனுஷன் பிறக்கிறப்ப ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் இடையில என பிரிக்கிற நீங்க பிரிவினைவாதியா? இல்ல எல்லாரும் சமம்ன்னு நினைக்கிற நாங்க பிரிவினைவாதியா? என்று விஜய் சேதுபதி பேசும் வசனம் நிச்சயம் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.