'தளபதி 64': எளிமையான பூஜையில் விஜய்-விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Thursday,October 03 2019]

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 64’ படத்தின் பூஜை இன்று நடைபெறும் என வெளிவந்த செய்தியை நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி சற்று முன்னர் சென்னையில் ’தளபதி 64’ பட பூஜை எளிமையாக நடைபெற்றது

இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சிவா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இன்று எளிமையாக இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்ததை அடுத்து அடுத்த வாரம் ஆயுத பூஜை முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்காக தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் விஜய் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும் தனது வழக்கமான கொள்கைகள் சிலவற்றை தகர்த்து, இந்த படத்திற்காக கூடுதலான நேரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் சம்மதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதிக்குள் முடிவடைந்து அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

'விஜய்யின்' வெறித்தனம் பாடலை டிக்டாக் செய்த பிரபல இயக்குனரின் மகள்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன.

தீபாவளி அன்று நேருக்கு நேராக மோதும் 'தளபதி 64' டீம்?

வரும் தீபாவளி அன்று விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதே தினத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

வேற லெவல்ல நாம போய்க்கிட்டு இருக்கோம்: சாண்டியிடம் சிறப்பு விருந்தினர்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் சிறப்பு விருந்தினர் வாரமாக உள்ளது. ஏற்கனவே சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ள

'தளபதி 64' படம் குறித்த அடுத்த அசத்தல் தகவல்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. ஆனால் 'பிகில் படத்தை விட விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 64' ப

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் முதல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் முதல் சீசன் வின்னரான ஆரவ் நடித்த 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது