close
Choose your channels

தீபாவளி அன்று நேருக்கு நேராக மோதும் 'தளபதி 64' டீம்?

Thursday, October 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி அன்று விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதே தினத்தில் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகி விடும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த படம் தீபாவளிக்கு முன்பு வெளியாக வாய்ப்பில்லை என்றும், தீபாவளி அன்று விஜய் மற்றும் கார்த்தி படங்களுக்கு இடையே மோதவுள்ளதாகவும் தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த செய்தியை உறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் விஜய்யின் பிகில், கார்த்தியின் ’கைதி’ மற்றும் விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ ஆகிய மூன்று படங்கள் திரைப்படங்கள் ஒருவேளை தீபாவளி அன்று மோதினால், தளபதி 64 திரைப்படக்குழுவினர் மோதுவதாக அர்த்தம் கொள்ளப்படும். அதாவது ’தளபதி 64 திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் ’கைதி’ படத்தின் இயக்குனர் என்பதும், தளபதி 64 படத்தின் வில்லன் விஜய்சேதுபதி தான் ’சங்கத்தமிழன்’ படத்தின் ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி ஆகிய மூவர் ’தளபதி 64; படத்தில் இணைவதற்கு முன்பே தீபாவளியன்று மூவரும் ஒரே நாளில் மோத உள்ளனர் என்பது சினிமா ரசிகர்களுக்கு ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.