close
Choose your channels

'தளபதி 64' படம் குறித்த அடுத்த அசத்தல் தகவல்!

Thursday, October 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. ஆனால் ’பிகில் படத்தை விட விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தளபதி 64’ படத்தின் அப்டேட்கள் அதிகம் வெளிவந்து சமூக வலைத்தளங்களை பரபரப்பாக்கி வருகின்றது.

ஏற்கனவே ’தளபதி 64’படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, அந்தோணி வர்கிஸ், சாந்தனு மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

’தளபதி 64’ படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆயுதபூஜை முடிந்தவுடன் தொடங்கும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. தளபதி 64’ பூஜை இன்று நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து இதுகுறித்து ஹேஷ்டேக்கை தளபதியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.