'பிச்சைக்காரன் 1' - ரூ.500, 1000.. 'பிச்சைக்காரன் 2' - ரூ.2000:  நெட்டிசன்களின் மீம்ஸ் வைரல்..!

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு சில வாரங்களில் ரூபாயை 500 மற்றும் 1000 செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று ’பிச்சைக்காரன் 2’ வெளியாகி உள்ள நிலையில் ரூ.2000 நோட்டு திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் 'நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற வசனம் இருந்தது. இந்த படம் வெளியான ஒரு சில நாட்களில் ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பலர் இந்த படத்தையும் , பணமதிப்பிழைப்பு நடவடிக்கையும் இணைத்து மீம்ஸ்களை பதிவு செய்தனர்.

அதேபோல் நேற்று ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் நேற்று இரவு ரூபாய் 2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் செப்டமொபர் 30க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை ஒருவர் ஒரே நேரத்தில் 10 எண்ணிக்கையிலான நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்துள்ளது.

இந்த நிலையில் ’பிச்சைக்காரன்’ படம் வரும்போது எல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் வருகிறது என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருவது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

'ராகவன் இஸ் பேக்'.. மீண்டும் ரிலீசாகும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம்..!

 கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் வரும் ஜூன் மாதம் டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதலருடன் 'இந்தியன் 2' நடிகை.. திருமணம் எப்போது? வைரல் வீடியோ..!

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை தனது காதலருடன் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'அயலான்', 'ஜிகர்தண்டா 2'வை தீபாவளி ரிலீஸில் இணைந்த இன்னொரு பிரபல இயக்குனரின் படம்..!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' என்ற திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதையடுத்து அதே படத்தை

அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு: காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' டிரைலர்..!

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வந்த 'காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்

அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ரசிகை பலி.. சூர்யாவின் உருக வைக்கும் பதிவு..!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சூர்யாவின் தீவிர ரசிகை ஐஸ்வர்யா என்பவர் பலியான நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து உருக்கமான ஒரு பதிவை செய்துள்ளார்.