close
Choose your channels

'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' ஆக்கிடாதீங்க.. பிரபல விமர்சகருக்கு விஜய் ஆண்டனி பதிலடி..!

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போதும் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது. இந்த படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்த நிலையில் ஒரு சில ஊடகங்கள் மட்டும் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திரைப்படங்களை விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் ’ரோமியோ’ படத்தை கேலியும் கிண்டலும் செய்து விமர்சித்த நிலையில் அவரது விமர்சனம் குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ’ரோமியோ’ படத்தை விமர்சனம் செய்தது குறித்து விஜய் ஆண்டனி சற்று முன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது::

பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் புளூசட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி ’ரோமியோ’ போன்ற நல்ல பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

என் அன்பு மக்களே, ’ரோமியோ’ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும், ரோமியோவை ’அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க என்று தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் இந்த பதிவுக்கு பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment