ரசிகர்களுக்கு விஜய் தரும் பிறந்தநாள் சிறப்பு பரிசு

  • IndiaGlitz, [Tuesday,May 31 2016]

இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்த நாள் வரும் ஜூன் 22ஆம் தேதி வரவுள்ளதை அடுத்து ரசிகர்கள் தளபதியின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது 42வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பரிசை தர விஜய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'விஜய் 60' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளில் வெளிவரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

More News

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரன்னிங் டைம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'இறைவி' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு 'யூ/ஏ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது...

சமாதானம் செய்ய வந்த சூர்யா மீது போலீஸ் புகார்.

சென்னை அடையாறு அருகே உள்ள ஒரு சாலையில் பெண் ஓட்டுனர் ஒருவரும்...

அனுஷ்காவின் அதிபயங்கர வில்லன் இவர்தான்....

அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வில்லன் ராணா என்பதும் அனைவரும் அறிந்ததே...

தனுஷின் அடுத்தடுத்த 4 படங்களின் முக்கிய தேதிகள்

தனுஷ் நடித்த 'தங்கமகன்' ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தனுஷின் அடுத்த படம் இன்னும் ரிலீஸ்...

முதன்முதலாக இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்-ஜி.வி.பிரகாஷ்

தமிழ் திரையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் பிரபலமாக உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இதுவரை ...